ADDED : ஜூன் 02, 2010 12:03 AM
வடமதுரை: வடமதுரை அருகே கனமழை நேரத்தில் "தீவு' போல துண்டிக்கப்படும் கிராமத்திற்கான பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
வடமதுரை- புகையிலைப்பட்டி ரோட்டில் குப்பமுத்துபட்டி உள்ளது. காணப்பாடி ஊராட்சிக் குட்பட்ட இக்கிராமத்தையொட்டி வாங்காலாயிசமுத்திர குளம் உள்ளது. சாணார்பட்டி ஒன்றியப் பகுதியில் பெய்யும் மழை நீர் வரட்டாறாக மாறி இக்குளத்திற்கு வருகிறது. ஒரு கி.மீ., தூர இடைவெளியில் இக்குளத்தின் இரண்டு மறுகால் பகுதிகள் அமைந்துள்ளன. இரண்டு மறுகால் வழியே வெளியேறும் நீர் இரண்டு ஓடைகளாக மாறி மற்றொரு இடத்தில் ஒன்று சேர்கிறது. மழை காலத் தில் அதிகளவு நீர் வரத்து இருக்கும் போது இரண்டு ஓடைகளாலும் குப்பமுத்துபட்டி நீரினால் சூழப்பட்டு "தீவு' போலாகிவிடும். பாலம் ஏதும் இல்லாததால் அவசர தேவைகளுக்கு வெளியேற முடியாத நிலை இருந்தது. பனை மரங்களால் தற்காலிக நடைபாதை அமைக் கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் 53.50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. தண்டபாணி எம்.எல். ஏ., தலைமை வகித்து, திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பராசக்திகதிரேசன் முன் னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் லட்சுமிபாண்டி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், ராஜம் மாள், புத்தூர் ஊராட்சி தலைவர் கணேசன், மாவ ட்ட சேவாதள தலைவர் முருகன், வட்டார காங்., தலைவர் ராஜரத்தினம், ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராயல் உள்பட பலர் பங்கேற்றனர்.